நிலவின் தென்துருவத்தில் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.. எதிர்பார்த்ததை விட வெப்பம் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து..!
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், அங்கு 158 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் தகிப்பதை அளவிட்டுள்ளது.
இந்த அளவு வெப்ப மாறுபாட்டினை எதிர்பார்க்கவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய விஞ்ஞானி பி.எச்.தாருகேஷா, நிலவின் மேற்பரப்பில், 68 முதல் 86 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும் என்று தாங்கள் நம்பியதாகவும், ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தகவல் வந்துள்ளது விஞ்ஞான உலகிற்கு இதுவே முதன்முறை என்றும் அவர் குறிப்பிட்டார். வெப்பநிலை தொடர்பாக விக்ரம் லேண்டர் அனுப்பிய வரைபடைத்தையும் தாருகேஷா வெளியிட்டார்.
Comments