6 தடுப்பணைகள் கட்டி விட்டு 45 தடுப்பணைகள் கட்டியதாக மோசடி.. ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த அரசு அதிகாரிகள் மீது வழக்கு.. !!
பெரம்பலூர் அருகே 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டிவிட்டு 45 தடுப்பணைகள் கட்டிவிட்டதாக கூறி அரசு நிதி 30 லட்சம் ரூபாயை முறைகேடு செய்ததாக அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்தடுப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேப்பந்தட்டை யூனியன் மலையாள பட்டி ஊராட்சியில் கடந்த 2019-2020- ல் 45 பாறாங்கல் தடுப்பணை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு 45 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டதாக முழு தொகையும் தனியார் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாறாங்கல் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டிவிட்டு 45 தடுப்பணைகள் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறி அரசு நிதி 30 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
Comments