சென்னை அண்ணாசாலையில் ஏராளமானோர் பங்கேற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனம்.. !!
சென்னை, அண்ணாசாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்று நடனமாடியதுடன், சிறுவர், சிறுமிகள் சாலைகளில் உற்சாகமாக விளையாடினர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கே.பி.என் காலனியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர், பாடல் பாடியும், நடனம் ஆடியும், யோகா செய்தும், சிலம்பம் சுற்றியும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
கடலூர் சில்வர் பீச் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்று இசைக்கேற்ப உற்சாக நடனமாடினர்.
கடலூர் எம்.எல்.ஏ. ஐயப்பன், மாநாகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட ஆட்சியர் அருண் தங்கராஜ், காவல்துறை எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் பங்கேற்று போதைபொருளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர். போதை எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் என நிகழ்ச்சியில் உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
Comments