ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் 5 நாட்கள் குழந்தை கதை சொல்லி ஓடவிட்ட மூதாட்டி..! பைப் லைன் சரியில்லை...!
திண்டிவனம் அருகே உள்ள கீழ் கூடலூர் கிராமத்தில் அமைக்கபட்டுள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீருக்கு பதில் காற்று மட்டும் வருவதாகவும், நூல் போல தண்ணீர் வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் கூடலூர் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் நூல் போல வருவதால் ஆத்திரம் அடைந்த மூதாட்டி தனது பாணியில் விளாசும் காட்சிகள் தான் இவை..! இங்காவது தண்ணீர் சொட்டும் நிலையில் மற்றொரு இடத்தில் உள்ள குடிநீர் குழாயில் காற்று மட்டுமே வந்தது
இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ஈச்சேரி சேகர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில், ஊராட்சியில் நடை பெற்ற பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீழ் கூடலூர் ஊராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்..
அப்பொழுது கீழ் கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சேரி கிராமத்தில் போடப்பட்ட 200க்கும் மேற்பட்ட தெரு பைப்புகளில் சரியான முறையில் தண்ணீர் வரவில்லை எனவும் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக அதிகாரியுடன் அங்கிருந்து ஒவ்வொரு பைப்புகளாக திறந்த போது அதில் தண்ணீருக்கு பதிலாக வெறும் காற்று மட்டுமே வருவதாக புகார் அளித்தார்..
அவருக்கு ஆதரவாக மூதாட்டி ஒருவரும் பைப் லைன் திட்டத்தின் குறைகளை எடுத்து வைத்ததால், பதற்றத்துக்குள்ளான அதிகாரிகள் உடனடியாக பைப் லைன்கள் சரி செய்யப்படும் என்று மட்டும் தெரிவித்து விட்டு தொடர்ந்து ஆய்வு செய்யாமல் காரில் ஏறி அவசர அவசரமாக கிளம்பிச்சென்றனர்..
Comments