ஜி 20 உச்சிமாநாட்டில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் "விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களை நிறுத்த போதிய இடம் உள்ளது" - விமான நிலைய அதிகாரிகள்
டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி 20 உச்சிமாநாடு நடைபெறுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்களை நிறுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக உள்நாட்டு விமானங்களில் 80 விமானங்கள் செல்வதும் 80 விமானங்கள் வருவதும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது மொத்த விமான சேவையில் 6 சதவீதம் தான் என்பதால் விமானப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.இதனிடையே இன்று டெல்லி போலீசார் ஜி 20 க்கான போக்குவரத்து ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளனர்
Comments