சேலம் சேகோசர்வ் ஜவ்வரிசி நிறுவனத்திற்கு புவிசார் குறியீடு சான்றிதழ்
சேலம் சேகோ சர்வ் சங்கத்தின் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சேலத்தில் செயல்பட்டு வரும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கம் பல்வேறு மாவட்டங்களில் அதன் உறுப்பினர்களிடமிருந்து ஜவ்வரிசியை பெற்று விற்பனை செய்து வருகிறது. இந்த சங்கத்தின் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்க அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் தமிழ்நாடு புவிசார் குறியீடு பதிவு நோடல் அலுவலர் சஞ்சய்காந்தி சான்றிதழை வழங்கினார். இந்தியா முழுவதும் 490 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளதாகவும், அதில், தமிழகத்தில் இருந்து மட்டும் 59 பொருட்கள் சான்றிதழ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Comments