நிலவில் ரோவர் வலம் வரும் புதிய காட்சியை வெளியிட்டது இஸ்ரோ.. தென்துருவத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வருவதாக தகவல்.. !!
நிலவின் தென்துருவத்தில் உள்ள ரகசியங்களை பிரக்யான் ரோவர் ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் உலவி வரும் ரோவரின் புதிய வீடியோ ஒன்றையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் - 3 திட்டத்தின் 3 குறிக்கோள்களில் 2 குறிக்கோள்கள் நிறைவேறி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முதல் குறிக்கோளான பாதுகாப்பான சாஃப்ட் லேண்டிங் 3 நாட்களுக்கு முன் எட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரோ, நிலவில் ரோவர் இயல்பாக ஊர்ந்து செல்ல வேண்டும் என்ற மற்றொரு குறிக்கோளும் எட்டப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
கடைசி குறிக்கோளான அறிவியல் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், உந்துகலன், லேண்டர், ரோவரின் கருவிகளும் இயல்பாக செயல்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments