திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

0 1128

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என்று
மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்வதாக கூறி 80 பவுன் நகை, 68 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் டாக்டர் ஒருவர் தொடுத்த வழக்கில் பிரசன்னா என்ற சக்கரவர்த்தி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் பெண் டாக்டர் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சக்ரவர்த்தி வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்து ஆனவர்களை குறிவைத்து மோசடி செய்வதாகவும், தங்களுக்குத் தெரிந்து 17-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் கூறினார்.

அப்போது, திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுவதாக கூறிய நீதிபதி டீக்காராமன், இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ உருவாக்கப்பட வில்லை என்று தெரிவித்தார்.

பதிவு செய்யும் ஆணோ அல்லது பென்ணோ பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தால்தான் மோசடிகள் தடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, சக்கரவர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments