கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.279 கோடியில் 4-வது வழித்தட விரிவாக்க பணி முன்னிட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

0 1391

சென்னை எழும்பூர் - பீச் ஸ்டேசன் இடையே நான்காவது ரயில் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

279 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இப்பணிக்காக கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை முதல் சிந்தாதரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் 7 மாதங்களில் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் கடற்கரை, கோட்டை, பூங்கா ஆகிய ரயில் நிலையங்களுக்கான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments