சந்திரமுகி 2 விழாவில் மாணவர்களுக்கு குத்து.. பவுன்ஸ்சர்ஸ் அட்டகாசம்.!
சந்திரமுகி-2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தண்ணீர் குடிக்கச்சென்ற மாணவரை பவுன்ஸ்சர்ஸ் தாக்கி விரட்டியதால் கைகலப்பு உருவானது. கல்லூரிக்குள் நடந்த திரைப்பட விழாவில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
சந்திரமுகி படத்தின் 2ஆவது பாகம் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் , நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் வருகிற 15ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு வந்த நடிகர் வடிவேலு இசையமைப்பாளர் கீரவாணியின் கால்களில் விழுந்து வணங்கினார்
மேடையில் பேசிய தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரனிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்டு வழக்கம் போல அஜீத் ரசிகர்கள் கோரிக்கை வைக்க, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடை பெறும் என்று அவர் கூறியதால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்
கல்லூரி வளாகம் என்பதால் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் பெரும் அளவில் திரண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த பவுன்ஸர் ஒருவர் , தங்கள் கட்டுப்பாட்டை மீறி தண்ணீர் குடிப்பதற்காக மேடை அருகே நுழைய முயன்ற மாணவரை தாக்கியதாக கூறப்படுகின்றது
பவுன்ஸரிடம் குத்து வாங்கிச்சென்ற மாணவர் தனது நண்பர்களை அழைத்து வந்த நிலையில் அவர்கள் பவுன்ஸர்களை அடிக்கை பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் , மாணவரை தாக்கிய பவுன்ஸரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. தனியார் கல்லூரிகள் தங்கள் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களை பொழுது போக்காக உற்சாகப்படுத்தும் விதமாக இது போல திரைப்பட விழாக்களை கல்லூரி வளாகத்திலும் , கல்லூரி கலையரங்குகளிலும் நடத்தி வருவது குறிப்பிடதக்கது.
Comments