இந்தியா திரும்பும் முன்பாக கிரீஸ் நாட்டு அறிஞர்கள், கலைஞர்களை சந்தித்தார் பிரதமர் மோடி
கிரீஸ் நாட்டை விட்டுப் புறப்படும் முன்பாக பிரதமர் மோடி பல்வேறு அறிஞர்கள், இசைக்கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்..
ஏதென்சில் உள்ள சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேராசிரியரான டிமிட்ரியோஸ் வாசில்லியாதிஸ் பிரதமரை சந்தித்து உரையாடினார்.
மோடி சிறந்த தலைவர் என்றும் இந்தியாவுக்கு பல நற்பணிகளை ஆற்றி வருகிறார் என்றும் இச்சந்திப்பு குறித்து டிமிட்ரியோஸ் தெரிவித்தார்.
இதேபோன்று கிரேக்க நாட்டின் இஸ்கான் ஆன்மீக அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாசை பிரதமர் மோடி சந்தித்தார்.
கிரேக்க நாட்டில் செய்து வரும் பணிகள் குறித்து பிரதமரிடம் குரு தயாநிதி தாஸ் விளக்கம் அளித்தார்.
கிரேக்க ஆய்வாளரும் இசைக்கலைஞருமான கான்ஸ்டன்டினோஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.
இந்திய கலைகள், இசை மீது அவருக்கு உள்ள ஆர்வத்தை பிரதமர் மோடி பாராட்டினார்.
முன்னதாக கிரேக்க நாட்டுத் தொழில்துறையினர் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பின்னர் இந்தியா திரும்பிய பிரதமர் மோடியை கிரேக்க நாட்டு வெளியுறவு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்...
Comments