ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவுமில்லை; வர விடவும் இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

0 1821

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவுமில்லை வர விடவும் இல்லை என்று திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் கலைஞர் கோட்டத்தின் அருகில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஒவ்வொருவரும் தீவிரமாக போராட வேண்டும் என்றார்.

சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கையில் இறந்து போன 88ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறிய உதயநிதி, 403 பேருக்கு ரமணா பட பாணியில் இறந்த பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments