இந்தியா - கிரீஸ் பண்டைய நாகரீகம் கொண்ட நாடுகள் - பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் மற்றும் இந்தியா இடையே ராணுவம், இணைய பாதுகாப்பு, வேளாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு கிரீஸ் சென்ற மோடி, தலைநகர் ஏதென்சில் கிரீஸ் அதிபர் கேதரீனா சகெல்லரோபவுலுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கிரீஸ் நாட்டின் 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருது மோடிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியோகோசும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின்னர் பேசிய மோடி, இந்தியாவும் கிரீசும் பண்டைய நாகரீகம் கொண்ட நாடுகள் என்று பெருமிதம் தெரிவித்தார். கிரீஸ் பிரதமர் கிரியோகோஸ் பேசுகையில், நிலவில் கால் பாதித்த இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Comments