கனகராஜ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் அல்ல சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர் - இ.பி.எஸ்.

0 2758

கொடநாடு வழக்கில் தம்மை சம்மந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பிட்ட சம்பவத்தை சட்டரீதியாக அணுக தமது ஆட்சியில் நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் வேண்டுமென்றே திரித்து சூழ்ச்சி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஓட்டுநர் கனகராஜை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று இனி யாராவது கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கனகராஜ் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர் என்றும் கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ். உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments