ஆயுதப்படைகளின் செயல்திறனை மேம்படுத்த ரூ.7800 கோடி மதிப்பில் திட்டம்

0 1262

ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஒப்புதலின் அடிப்படையில், விமானப் படையின் திறனை மேம்படுத்த, எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டரில் பயணிக்கும் வீரர்களுக்கு மின்னணு போர்க் கவச உடைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

காலாட்படையின் திறனை வலுப்படுத்தும் வகையில் இலகுரக இயந்திர துப்பாக்கிகள், தற்காலிக பாலமாக செயல்படும் பாதுகாப்பு வாகனங்கள், கடின பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்திய கடற்படையின் எம்ஹெச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இவை அனைத்தும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments