தமிழகத்தில் காலை உணவு விரிவாக்க திட்டம் இன்று முதல் தொடக்கம்... பிற மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் திட்டத்தை துவக்கி வைத்தனர்
தமிழகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். நெல்லை மாவட்டம், இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, மாணவிகளுக்கு உணவை ஊட்டி விட்டார்.
காட்பாடி அருகே சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி, நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினர்.
ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.
ஒட்டன்சத்திரத்தில் மானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைச்சர் சக்கரபாணி மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு கிச்சடி, ரவா கேசரியை பரிமாறினார்.
Comments