ராக்கெட்ரி படத்துக்கு விருது கிடைத்ததால் மகிழ்ச்சி... நடுவர்களுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்த மாதவன்

0 1339

நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படமாக தேசிய விருது கிடைத்ததற்கு டிவிட்டரில் மாதவன் இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளார்.

தாம் பேச்சற்று மகிழ்ச்சியில் திளைப்பதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நம்பி நாராயணன் சந்திரயான் 3 வெற்றிப் பயணத்தை பார்த்து ரசிப்பதில் மூழ்கியிருந்த தமக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

தனது வாழ்க்கை பற்றிய திரைக் கதைக்கு நாடு அங்கீகாரம் அளித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாக நம்பி நாராயணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments