வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை அவரது இல்லத்தில் சந்தித்தார் அமைச்சர் பொன்முடி

0 1600

சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து அதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தையை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிவேலை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, தனது தங்கையின் திருமணத்திற்கு கூட வராமல் தொடர்ந்து சந்திரயான் பணியினை மேற்கொண்டவர் வீரமுத்துவேல் எனப் புகழாரம் சூட்டினார்.

மேலும், வீரமுத்துவேல் விழுப்புரத்திற்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments