முதற்கட்டமாக நடத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்ட ஆய்வில் சாத்திய கூறுகள் குறைவாக இருந்ததால் லைட் மெட்ரோவிற்காக ஆய்வு
திருநெல்வேலியில் லைட் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தை நெல்லையில் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில் சாத்திய கூறுகள் குறைவாக இருப்பதாக தெரியவந்ததால், தற்போது லைட் மெட்ரோவிற்கான ஆய்வில் மெட்ரோ ஈடுபட்டுள்ளது.
லைட் மெட்ரோ என்பது ட்ராம் வண்டியின் நவீன வடிவம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், மெட்ரா திட்டத்தில், உயர்மட்ட பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் வரையிலும், சுரங்கப்பாதை அமைக்க 550 கோடி ரூபாயில் வரையிலும் செலவிடப்படுவதாக தெரிவித்தார்.
லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கிலோ மீட்டருக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டால் போதும் என தெரிவித்த சென்னை மெட்ரோ அதிகாரிகள், 30 ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ள சேலம் மற்றும் திருச்சி சாத்தியக்கூறு அறிக்கையோடு நெல்லை மெட்ரோ அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.
Comments