ஃபுகுஷிமா கதிரியக்க நீரை பசிபிக் கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் ஒரு சாரார் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஃபுகுஷிமா கதிரியக்க நீரை பசிபிக் கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் ஒரு சாரார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டுள்ள டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள், மக்களுக்கு முழு புரிதலை ஏற்படுத்தாமல் நீரை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டதாக குற்றம்சாட்டினர்.
ஜப்பானின் செயலால் சீனாவின் கடல் உணவுப் பொருள் விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட நீரால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறும் ஜப்பான், அந்த நீரை தங்கள் நாட்டிலேயே வைத்துக்கொள்ளாமால் ஏன்கடலில் விடுகிறது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜப்பானின் நடவடிக்கை கடல் உணவுத் தொழிலை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பாதிக்கும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments