அமெரிக்கா ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

0 892

அமெரிக்காவில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் தனது முன்னாள் மனைவி உள்பட 3 பேரை பொதுவெளியில் சுட்டுக்கொன்றார்.

கலிபோர்னியா மாநிலத்திள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்கு இரவு 7 மணியளவில் வந்த ஒரு நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

தகவலறிந்து விரைந்த காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

அவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என்பதும், தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை குறி வைத்தே துப்பாக்கி சூடு நடத்தியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments