கந்துவட்டி புகார் - தனியார் நிதி நிறுவனங்களில் சோதனை... கல்வி சான்றிதழ்கள், நில பத்திரங்கள், வாகன பத்திரங்கள் பறிமுதல்

0 3370

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கந்துவட்டி புகார் தொடர்பாக தனியார் நிதி நிறுவனங்களில் வருவாய்த்துறை துறையினர் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி பைனான்ஸ், பச்சையப்பா பள்ளி தெருவில் உள்ள ஸ்ரீவாரி பைனான்ஸ், முத்தையா நகரில் உள்ள சத்தியமூர்த்தி என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதில், எழுதப்படாமல் கையொப்பம் மட்டும் பெறப்பட்ட 180 பாண்டு பத்திரங்களும், நிரப்பப்படாமல் கையொப்பம் மட்டும் இடப்பட்ட 90 காசோலைகளும், அடமானம் வைக்கப்பட்ட சுமார் 400 ஏடிஎம் கார்டுகளும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் புகார் தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments