அர்ஜென்டினாவில் கொள்ளையால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம்... கடைகளை திறக்க முன்வராத உரிமையாளர்கள்
கொள்ளையினால் பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா நகரங்களில் வணிக உரிமையாளர்கள் அச்சம் காரணமாக மீண்டும் கடைகளை திறக்க வில்லை.
அண்மையில் பியூனஸ் அயர்ஸ் தலைநகரைச் சுற்றியுள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டன.
சிறு குழுக்கள் கடைகளுக்குள் நுழைந்து உணவு மற்றும் பிற பொருட்களைத் திருடுவதை தொலைக்காட்சிகள் வெளியிட்டன்..
பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள மொரேனோவில் உள்ள ஒரு துணிக்கடை உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டது.இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படும என நிதி அமைச்சர் செர்ஜியோ மாஸா அறிவித்துள்ளார்.
பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments