சந்திரயான் - 3 லேண்டரிலிருந்து இறங்கி நிலவில் நகரத் தொடங்கியது ரோவர் - இஸ்ரோ

0 36319

நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுப் பணியை தொடங்கி விட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள இஸ்ரோ, "நிலவில் நடைபோட்டது இந்தியா" என பெருமிதம் தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, தனிமங்கள், தாதுக்கள், நில அதிர்வுக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து 14 நாட்களுக்கு ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.

ரோவர் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தரவுகளை பெற்று அவற்றை விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பி வைக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments