மிசோராம் மாநிலத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு..!
மிசோராம் மாநிலத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஐஸ்வால் அருகே சைராங் என்ற இடத்தில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு வந்தது. நேற்று இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் அதனுள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதி மூலமாக அளிக்கப்படும் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments