உலகமே உற்று நோக்கும் நிகழ்வு : சந்திரயான் - 3 : நிலவில் தரையிரங்கும் லேண்டர்.. நேரலையில்...

0 8106

சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறக்கும் நடவடிக்கை தொடங்குகிறது

மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க திட்டம்

பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆணை பிறப்பித்ததும் தரையிறங்கும் செயல்முறை துவங்கும் : இஸ்ரோ

விக்ரம் லேண்டரில் உள்ள திராட்டில் எஞ்சின்கள் முழு அளவில் இயங்கத் தயார் நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்

மென்மையாக தரையிறக்கும் நடவடிக்கைக்கு அனைத்தும் தயாராக இருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு

விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி திட்டமிட்டபடி விழும் என விஞ்ஞானிகள் கணிப்பு

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய உடன், பிரக்யான் ரோவர் வெளிவந்து ஆய்வு மேற்கொள்ளும்

லேண்டர் நிலவை தொட்டதும் புழுதி பறக்கும் என்பதால் முதல் 3 மணி நேரத்துக்கு எதுவும் செய்யாமல் விண்கலம் காத்திருக்கும் என தகவல்

நிலவின் புழுதி அடங்கியதும் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும்

லேண்டரில் 4 கருவிகள் உள்ளன. அவை நிலவில் எலக்ட்ரான் அடர்த்தி , வெப்ப அளவீடு செய்ய பயன்படும்

நிலவில் ஏற்படும் அதிர்வுகளை அளவிடுதல் மற்றும் மேற்பகுதியை ஆய்வு செய்யவும் பயன்படும்

நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆராயும் ரோவரில் இரு முக்கிய கருவிகள் உள்ளன

நிலவின் மணல் மற்றும் பாறைகளை ரோவர் ஆய்வு செய்யும். மண், பாறைகளின் கலவைகளையும் ஆராயும்

நிலவின் பரப்பில் வேதியியல் தன்மை குறித்தும், கனிமங்கள் குறித்தும் ரோவர் ஆய்வு செய்யும்

வழி செலுத்துவதற்கான ஆன்டெனாக்கள், சோலார் பேனல்களும் ரோவரில் இருக்கின்றன

விக்ரம் லேண்டர் கருவியில் மொத்தம் ஒன்பது சென்சார்கள் இடம்பெற்றுள்ளன

லேசரை பயன்படுத்தி வேகத்தையும், ரேடியோ அலை மூலம் தூரத்தையும் லேண்டர் அளவிடும்

லேண்டரின் நிலை கண்டறிதல் கேமரா தரையிறங்கும் தளத்தின் படங்களை பதிவு செய்யும்

சந்திரனின் மேற்பரப்பில் உள்ள தடைகளை கண்டறிவதற்கான கேமராவும் லேண்டரில் உள்ளது

தரையிறங்கிய தகவலை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் சென்சாரும் லேண்டரில் உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments