இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களை பாதுகாக்க முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - இ.பி.எஸ்.

0 1022

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க தவறிய முதலமைச்சர், வழக்கம் போல வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மட்டுமே எழுதுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,மொத்தம் 6 படகுகளில் ஆறுகாட்டுத்துறையில் இருந்து சுமார் 22 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை திடீரென்று 13 இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து, மீனவர்களை கத்தி, கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

மேலும், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவிகள், பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படித்தான் தாக்குவோம், காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சரை அனுப்பி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறச்சொல்லாமலும், மீன்பிடி சாதனங்கள் மற்றும் நிவாரணங்களை வழங்காமலும் இருப்பதாக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட காவல் துறையின் சிறப்புப் பிரிவான கடலோர பாதுகாப்புக் குழுமம், தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments