இந்தியா விரைவில் 5 ட்ரில்லியன் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாறும் - பிரதமர் மோடி
இந்தியா விரைவில் 5 ட்ரில்லியன் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், சர்வதேச பொருளாதாரத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ள போதிலும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதாக கூறினார்.
பேரிடர்களையும், இன்னல்களையும் பொருளாதார சீர்த்திருத்தத்திற்கான வாய்ப்பாக இந்தியா மாற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள், இந்தியாவில் எளிதாக வணிகம் மேற்கொள்ள வழிவகுத்துள்ளதாகவும், ஜிஎஸ்டி, திவால் சட்டம் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
சூரிய மின்சக்தி, காற்றாலை, மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்டவற்றில் இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், வருங்காலத்தில் உலகின் வளர்ச்சி என்ஜினாக இந்தியா மாறும் என்று குறிப்பிட்டார்.
Comments