சட்டவிரோதமான பொருளாதாரத் தடைகளால் பாதிப்பு-ரஷ்ய அதிபர் புதின்

0 1689

அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் சட்டவிரோதமான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச பொருளாதார நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் காணொளி வாயிலாக அவர் உரை நிகழ்த்தினார்.

சில நாடுகளில் ரஷ்யாவின் சொத்துகள் முடக்கப்பட்டதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதும் சட்டவிரோதமானது என்று புதின் தெரிவித்தார்.

பொருளாதார வாழ்வையும், சுதந்திரமான வர்த்தகத்திற்கான அடிப்படை விதிகளையும் நசுக்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை புதின் கடுமையாக விமர்சித்தார்.

காய்கறிகள் வேளாண் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து ஏழை நாடுகளை அதிகமாக பாதித்து இருப்பதாகவும் புதின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments