ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி இந்தியா வரவிருப்பதாகவும், 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு அவரது இந்திய சுற்றுப்பயணம் அமையும் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ள ஜோ பைடன், பன்னாட்டு நிதி அமைப்பான ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னாட்டு நிதி அமைப்பும், உலக வங்கியும் வளரும் நாடுகளுக்கு கூடுதலான சேவை அளிக்க வேண்டும் என்று ஜோ பைடன் வலியுறுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பன்னாட்டு நிதி நிலை வங்கிகளை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Comments