பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது- உலகத் தலைவர்கள் பங்கேற்பு
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நேற்று தொடங்கியது.
வர்த்தகப் பேரவையின் கூட்டத்தில் பொருளாதாரம், முதலீடுகள், உறுப்பு நாடுகளிடையே உறவுகளை பலப்படுத்துதல் சார்ந்த விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்ற போதும் சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கே என்று அனைவரும் தேடும் நிலை ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்க அதிபருடன் பேச்சு நடத்திய ஜி ஜின்பிங் வர்த்தக மாநாட்டை புறக்கணித்தது ஏன் என்று புரியாத புதிராக இருந்தது.
பிரதமர் மோடி பேசி முடித்த பிறகு ஜி ஜின்பிங் சார்பில் சீன வர்த்தக அமைச்சர் வாங்-வென்டாவோ ஒரு அறிக்கையை வாசித்தார்.
வளரும் நாடுகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் நாடுகளை சாடிய அவர், அவர்களின் சதித்திட்டம் பலிக்காது என்று கூறினார்.
உக்ரைன் போர்க் குற்றங்களுக்கு காரணமான புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அவர் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டது.
ஆனாலும் காணொளி வாயிலாக புதின் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை அவர் காணொளியில் கேட்டுக் கொண்டிருந்தார்
Comments