சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர்.! நிலவைத் தொடும் வரலாற்று தருணம்.!
இந்தியாவின் சந்திரயான் 3 இன்று மாலை 6 மணி 4 நிமிடத்தில் சந்திரனில் தரையிறங்க உள்ளதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலாவில் கால்பதிக்க உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இன்று மாலை 6 மணி 4 நிமிடங்களில் அது நிலவில் தென்துருவத்தில் மென்மையாக தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விக்ரம் என்ற இந்த லேண்டரில் இருந்து பிரஞ்யான் என்று பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. நிலவில் ஒரு நாள் என்பது, பூமியின் 14 நாட்கள் ஆகும்.
இதுவரை அமெரிக்கா மற்றும் சீனா முந்தைய சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே நிலவில் ஆய்வுகளை நடத்தியுள்ளன.
சந்திரயான் 3 தரையிறங்கும் கடைசி 17 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகமே ஆவலுடன் அந்த நிமிடங்களை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சந்திரயான் 3 வெற்றி பெற பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன
அமெரிக்காவின் வர்ஜினாவிலும் இந்திய வம்சாவளியினர் சந்திரயான் 3 வெற்றிக்காக பிரார்த்தனை நடத்தினர்
இந்தியா நிலவில் தனது கால் பதிப்பதன் மூலம் அறிவியல் வரலாறு புதிதாக எழுதப்பட உள்ளது.
Comments