சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி காண ஏற்பாடு..!

0 2454

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கும் நிகழ்வை அங்கிருந்து பார்வையிட உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments