இந்தியக் கொடிகளை ஏந்தி பிரதமரை வரவேற்ற தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள்.. நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை வாத்திங்களுடன் வரவேற்பு.. !!

0 1477

15ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு ஜொகன்னஸ்பர்கில் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாநாட்டில் பங்கேற்க தனிவிமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, வாட்டர்க்ளூஃப் விமானப் படைத் தளத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமரை வரவேற்கும் வகையில் ஆஃப்ரிக்க பாரம்பரிய நடனக் கலைஞர்கள் நடனமாடினர். அவர்களை கைதட்டி ரசித்து பிரதமர் மோடி ஊக்குவித்தார்.

கைகளில் இந்திய கொடிகளை ஏந்தியபடி தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஆரத்தி தட்டு எடுத்து வந்த சிறுவனை தலையில் தொட்டு அவர் ஆசிர்வதித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜொகன்னஸ்பர்க் நகரில் தாம் தங்கும் ஓட்டலுக்கு முன்பு திரண்ட தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இந்திய பாரம்பர்ய இசை வாத்திங்களுடன் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் வணிகப்பிரிவு தலைவர்களுடன் கலந்துரையாட உள்ள பிரதமர், அதிபர் ராமபோசா அளிக்கும் இரவு விருந்திலும் பங்கேற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments