சிலி நாட்டில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை நிலச்சரிவு,மண்சரிவு ஏற்படும் அபாயம்
சிலி நாட்டில் மத்திய-தெற்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஏராளமானோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் சிலி அதிபர் Gabriel Boric வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதபடுத்த உத்தரவிட்டார்.
மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் சீறிப்பய்ந்த வண்ணம் உள்ளது. மேலும் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கை உடன் இருக்குமாறு அறிவுறுத்தபட்டனர்.
Comments