ரயிலின் கழிவறையில் 2 நாட்களாக பதுங்கிய இளைஞர்.! கழிவறை பூதம் சிக்கியது எப்படி.?

0 3343

ஓடும் ரயிலின் கழிவறையில் இரு தினங்களாக பதுங்கி இருந்த இளைஞரை, கழிவறை பூட்டை உடைத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.                 

எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறை பூட்டை உடைக்கும் பரபரப்பான காட்சிகள் தான் இவை..!ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் வாராந்திர ரயில் நேற்று அதிகாலை டாடா நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் S.2 முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் பலமுறை கழிவறை செல்ல முயன்றுள்ளனர்கள். ரயில் பெட்டியின் ஒருபக்க கழிவறை மட்டும் பலமுறை தட்டியும் திறக்கவில்லை.

இதுகுறித்து முன்பதிவு பெட்டியின் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் அளித்தனர். அவரும் முயன்றார். திறக்க முடியவில்லை.

பின்னர் டிக்கெட் பரிசோதகர் ரயில்வே கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சுமார் 33 மணி நேரமாக பல முக்கிய ரயில் நிலையங்களை கடந்து அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கட்கிழமை மதியம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது.

அங்கு வைத்து கழிவறையை திறக்க எந்த முயற்சியையும் எடுக்காமல் ரயில்வே ஊழியர்கள் அலட்சியமாக இருந்தனர்.

ரயில் மதியம் சுமார் 2 மணி 6 நிமிடங்களுக்கு அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை 1 ல் வந்து நின்றது.

அப்போது தயாராக இருந்த ரயில்வே ஊழியர் உட்பக்கம் தாழிடப்பட்டிருந்த கழிவறை கதவை அரக்கோணம் ரயில்வே போலிசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் முன்னிலையில் உடைத்தனர்.

அப்போது 18 வயது மதிக்கத்தக்க ஹோகன்தாஸ் என்ற வட மாநில புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் இளைஞர் உள்ளே பதுங்கி இருந்தார்.   

அழுது ஆக்டிங் போட்ட அந்த புள்ளீங்கோவை பிடித்த ரயில்வே ஊழியர்கள் அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்கள்.

ரயில்வே போலீசார் அந்த இளைஞர் யார், எங்கிருந்து வருகின்றார் ? எதற்காக ரயில் பெட்டி கழிவறையில் உட்பக்கம் தாழிட்டு பயணம் செய்தார்.? கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவரா..? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திவீர விசாரனை நடத்தி வருகின்றனர்.

கழிவறை பூதத்தை வெளியே கொண்டுவர மேற்கு கொண்ட முயற்சியால் ரயில் சுமார் 10 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டுச்சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments