நெல்லை அருகே இளைஞர் வெட்டி படுகொலை பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

0 9328

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலாவின் மகன் பார்வதி நாதன்.

பெயிண்டரான இவர் பெங்களூர் பணிக்கு செல்வதற்காக கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் வந்துள்ளார். அப்போது நண்பர் ஒருவர் மது குடிக்க அழைப்பு விடுத்ததால் ஆதிபராசக்தி நகர் பகுதியில் வேலா மது வாங்கி வந்துள்ளார்.

தனியாக வந்த அவரை மர்ம நபர்களசிலர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பார்வதிநாதன் உடல் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அண்மையில் பார்வதி நாதன் நண்பர்களிடையே இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments