போதிய மழையில்லாததால் செடியிலேயே சுருங்கிப்போகும் சாம்பார் வெள்ளரி... நிவாரணம் வழங்குமாறும் கோரும் விவசாயிகள்

0 1672

தருமபுரி மாவட்டத்தில் மானாவாரியாகப் பயிரிடப்பட்ட சாம்பார் வெள்ளரி பயிர்கள், மழையின்மை காரணமாக செடியிலேயே சிறுத்துப் போனதால், உரிய விலை கிடைக்காமல் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சீரான பருவமழை பெய்ததால் அமோக விளைச்சல் கண்ட சாம்பார் வெள்ளரி, மூட்டை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விலை போனதாகக் கூறும் விவசாயிகள், நடப்பாண்டு 100 முதல் 150 ரூபாய் கூட விலை கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்தால் 70 ஆயிரம் வரை லாபத்தை ஈட்டி தரும் என்றும், ஆனால் இந்த ஆண்டு 3 ஏக்கரில் 90 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டும், பருவ மழை பொய்த்ததால், செடி வளர்ச்சி அடையாமல் வெள்ளரி காய்கள் தரம் குன்றி பழுத்து, வியாபாரிகள் வாங்க தயக்கம் காட்டுவதாகக் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments