தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா...திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இன்று வெகு விமரிசையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருவாரூர் அருகே படைவெட்டி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் புனித நீர் கலசத்தை தலையில் சுமந்து வந்த சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றினர்.
ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே கஞ்சம்மாள், மாராத்தாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, இன்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தரிசித்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வீருநாகம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தை தரிசித்த பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பூவிழுந்தநல்லூர் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர் விசாலாட்சி அம்மன், விஸ்வநாதர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Comments