நாட்டில் அதிகமானோர் தாமாக முன்வந்து வரி செலுத்துகின்றனர் - பிரதமர் மோடி
2014ஆம் ஆண்டிற்கு முன்பு நடந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர், நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதை அது காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர் வறுமை நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டில் 4 லட்ச ரூபாயாக இருந்த தனி நபர் சராசரி ஆண்டு வருமானம் தற்போது 13 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய ஆட்சியின் ஊழல்கள் அரசின் நடவடிக்கையால் தற்போது ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Comments