சந்திரயான் 2 ஆர்பிட்டர் - சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு - இஸ்ரோ தகவல்
ஏற்கனவே நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டருக்கும், சந்திரயான்-3 லேண்டருக்கும் இடையே வெற்றிகரமாக தொலைதொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய சந்திரயான் - 3 விண்கலத்துடன் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பை நெருங்கி பயணித்து வருகிறது.
லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதியன்று தென் துருவத்தில் எந்த இடத்தில் பத்திரமாக லேண்டரை தரையிறக்கலாம் என விக்ரம் எடுத்து அனுப்பிய படங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே, 4 ஆண்டுகளுக்கு முன்பு நிலவை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான் - 2 ஆர்பிட்டாருடன், லேண்டருக்கு இரு வழி தொலைதொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள கூடுதல் வழி உருவாகியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Comments