சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது துப்பாக்கி சூடு... 4 மாதங்களில் 430 பேர் சுட்டு கொல்லப்பட்டதாகத் தகவல்
ஏமன் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு ராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
எத்தியோப்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், வேலை தேடி சவுதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏமன் எல்லை அருகே அவர்களை சவுதி அரேபிய ராணுவத்தினர் கண்மூடித்தனமானச் சுட்டு கொல்வதாகவும், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 430 பேர் ஈவு இறக்கமின்றி கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து முன்னனி கால்பந்து வீரர்களை விலைக்கு வாங்கி சர்வதேச அரங்கில் செல்வாக்கை உயர்த்த விரும்பும் சவுதி அரேபியா, இதுகுறித்து எழுப்பப்பட்ட கேல்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments