குவாத்தமாலா அதிபர் தேர்தலில் பெர்னார்டோ அர்வாலோ வெற்றி... வறுமை, விலைவாசி உயர்வால் ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பெர்னார்டோ அர்வாலோ ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
வறுமை, விலைவாசி உயர்வால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல் கும்பல்களுக்கு அஞ்சி பல நீதிபதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டை விட்டே வெளியேறினர்.
முன்னனி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட அர்வாலோ, 58 சதவீத வாக்குகளை பெற்று வாகை சூடினார்.
Comments