தெங்குமரஹடா மக்களை வெளியேற்றி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்
அரசு எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிராமத்தை விட்டு வெளியேற மனமில்லை என ஒரு தரப்பும் முறையான இழப்பீட்டை வழங்கினால் வெளியேறத் தயார் என மற்றொரு தரப்பும் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹடா வன கிராமத்தில் புலிகள் காப்பகம் பகுதியில் வசிக்கும் மக்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி 3 மாதத்திற்குள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய தேசிய புலிகள் காப்பக ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய கூட்டுறவு பண்ணை சங்க உறுப்பினர்கள், கிராமத்தை விட்டு வெளியேற்றாமல், தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
"முதலில் வீடு கட்டி கொடுத்து விவசாயம் செய்ய நிலம் வழங்குகிறோம் என்றனர், அதன் பின்னர் 5 சென்ட் இடத்தில் வீடு கட்டி பணம் தருகிறோம் என்றனர்.
தற்போது வீடு இல்லை, 15 லட்சம் பணம் மட்டும் தருகிறோம் என்கின்றனர்" என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments