பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்
பேரூரில் 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
JICA எனப்படும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் இந்த நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தின் கீழ் (( green fellowship)) நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
'பசுமைத் தோழர்' என்றழைக்கப்படும் இவர்கள், காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் கொள்கைத் திட்டங்களை வகுப்பத்துடன் மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளையும் மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments