மகளிர் உரிமைத் தொகைக்கு 1.55 கோடி விண்ணப்பங்கள் பதிவு... மீண்டும் முகாம் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென தகவல்
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரையில் ஒரு கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திட்ட பதிவிற்கான சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிசீலனைக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம், கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், மீண்டும் முகாம் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் இணைக்க வலியுறுத்தி ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments