சிதம்பரத்தில் பெண்ணிடம் 40 ஆயிரம் ரூபாய் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடனாகப் பெற்ற 22 ஆயிரம் ரூபாய்க்கு 79 ஆயிரம் ரூபாயாக திருப்பிச் செலுத்திய பிறகும் மேலும் 40 ஆயிரம் ரூபாய் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற அந்த நபர் குறித்து தமிழ்ச் செல்வி என்ற பெண் புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடமிருந்து கையெழுத்திடப்பட்ட காலி பத்திரங்கள், காசோலைகள், தண்டல் நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Comments