தந்தையின் மறைவு தெரியாமல் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய வீராங்கனை

0 3856


மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்கு ஒரு கோல் அடித்து கோப்பையை பெற்று தந்த அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனாவுக்கு அவரது தந்தையின் மறைவு செய்தி வெற்றிக்கு பின்னரே தெரிவிக்கப்பட்டது.

தந்தை இறந்த செய்தியை தெரிவித்தால் அவரது ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என கருதிய குடும்பத்தாரும், கால்பந்து நிர்வாகிகளும் அவருக்கு தெரிவிக்க வில்லை.

இறுதி போட்டி நடைபெற்ற நாளன்று கார்மோனாவின் தாயாரும் , சகோதரர்களும் ஆஸ்திரேலியா வந்தனர். ஸ்பெயின் கோப்பையை வென்ற பின்னரே கார்மோனாவுக்கு தந்தையின் மறைவு தெரிவிக்கப்பட்டது.

ரியல் மாட்ரிட் கிளப் மற்றும் தேசிய கால்பந்து சங்கங்களின் நிர்வாகிகள் கார்மோனா தந்தை மறைவுக்கு இரங்கலை தெரிவித்து உள்ளனர். கார்மோனாவை ஸ்பெயின் கால்பந்தின் வரலாறு என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments