பாக். அதிபர் தமது செயல்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் -பாக்.சட்ட அமைச்சகம்

0 1543

ராணுவ சட்டத்திலும் ரகசிய சட்டங்களிலும் தாம் கையெழுத்துப் போட ஒப்புதல் அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினரை தண்டிக்கும் இந்தச் சட்டங்களுடன் தமக்கு முரண்பாடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இச்சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

இச்சட்ட மசோதாக்கள் தம்மிடம் வந்த போது திருப்பி அனுப்பிவிடும் படி தமது அலுவலகத்துக்குகூறியதாகவும் ஆனால் தமது உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் கூறிய ஆரிப் அலி அல்லா அனைத்தையும் அறிவார் என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments