வெளிநாட்டு கார்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம்.. அதிபர் புதின் உத்தரவை புறக்கணிக்கும் அதிகாரிகள்

0 1337

வெளிநாட்டு கார்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம் என்ற ரஷ்ய அதிபர் புதின் உத்தரவை  அதிகாரிகள் எவரும் பின்பற்றவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனை மெய்பிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் உத்தரவு பிறப்பித்த ஒரே வாரத்தில் அரசு சார்பில் வெளிநாட்டு கார்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் ரூபிள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் மெத்வதேவ், ஜெர்மன் தயாரிப்பான மெர்சிடஸ் காரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இது ரஷ்ய அதிபரின்  புதிய  உத்தரவுக்கு அதிகாரிகள் முதல் உயர் பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் வரை உடன்படவில்லை என்பதை காட்டுவதாக, அங்குள்ள அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு கார்கள் ஆப்பிள் போன்களை பயன்படுத்த கூடாது என்பதை கடைபிடிப்பது மிகவும் கடினம் என கூறும் மூத்த ரஷ்ய ஆய்வாளர் ஒருவர், மாற்று வழிகளை  ரஷ்யாவால் கண்டு பிடிக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

மேலும் கார்களையும் உற்பத்தி  செய்ய இயலாது என கூறும் அவர், விரைவில் சீனா, மற்றும் ஈரான் கார்களை உள்ளூர்மயமாக்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments